திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் நகரைச் சேர்ந்த நாகலட்சுமி, பெரிய கோட்டை ஊராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் பணிக்குச் சென்றபோது, தனியார் பள்ளிக்கு அருகில் இருந்த குப்பைகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. அப்போது, குப்பையில் கிடந்த காலி மதுபாட்டில்கள் வெடித்து சிதறியதில் நாகலட்சுமிக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.