உடுமலை: அரசு பேருந்தை மறித்து போதை ஆசாமி அட்டகாசம்!

உடுமலை அருகே பெரிய வாளவாடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் சின்ன வாளவாடி கிராமம் உள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த ஆசாமி ஒருவர் குடிபோதையில் நேற்று மாலை பொள்ளாச்சியில் இருந்து வாளவாடிக்கு வந்த அரசுப் பேருந்தை மறித்து அராஜகத்தில் ஈடுபட்டார். பொதுமக்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றும் பஸ்சை நகரவிடாமல் சுமார் ஒரு மணி நேரம் தடுத்து சிறை பிடித்து வைத்திருந்தார். இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு பஸ் வசதி கிடைக்காமல் அவதிக்கு உள்ளானார்கள்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏழை எளிய மக்களுக்கு அரசு பஸ் போக்குவரத்து பிரதானமாக உள்ளது. பல்வேறு பணிகளுக்கு செல்வதற்காக இன்று பஸ்சை எதிர்பார்த்து காத்திருந்தோம். மாலை பொள்ளாச்சியில் இருந்து வருகை தந்த அரசு பஸ்ஸை போதை ஆசாமி தடுத்து நிறுத்தி நகர விடாமல் சிறைபிடித்தார். இதே போன்று எங்கள் பகுதிக்கு வந்த மற்றொரு பேருந்தையும் வழிமறித்துக் கொண்டார். இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களும், பணிக்கு சென்ற பொதுமக்களும் ஊருக்கு திரும்பி வருவதற்கு உடுமலை மற்றும் பொள்ளாச்சியில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவே சின்ன வாளவாடி பகுதியில் அரசு பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட ஆசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி