உடுமலை: இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் 10வது மாநாடு!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் 10வது மாவட்ட மாநாடு ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், துணைப் பொதுச் செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாநாட்டில் மாவட்ட தலைவர் மூர்த்தி, செயலாளர் செல்வராஜ் மற்றும் 15க்கும் மேற்பட்ட நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். எஸ்.ஐ.ஆர் எனப்படும் தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைக்கு எதிராக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி