உடுமலை அருகே தடுப்பில் மோதிய லாரியால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டி பகுதி பொள்ளாச்சி தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தினமும் அதிகப்படியான வாகனங்கள் வந்து செல்லும் வழியில் இன்று அதிகாலை தாராபுரத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி சிமெண்ட் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதியதால் சிறிது நேரம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் விபத்து ஏற்பட்ட லாரியிலிருந்து மற்றொரு லாரிக்கு சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சிக்கு லாரி கிளம்பிச் சென்றது. இந்நிலையில் முதல்கட்ட விசாரணையில் ஓட்டுநர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய லாரி அப்புறப்படுத்தாமல் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் அப்படியே உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி