திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோழிக்குட்டை கால்நடை மருத்துவ கல்லூரியின் பண்ணை வளாகத்தில் வரும் 23ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இப் பயிற்சியில் முதலில் வரும் 25 நபர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என கல்லூரி முதல்வர் மலர்வண்ணன் தெரிவித்துள்ளார். இந்த செய்தி குறிப்பு மூலம் பயிற்சி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.