திருப்பூர், உடுமலைப்பேட்டை அருகே தளிரோட்டில், மக்காச்சோளம் தட்டுகளை டிராக்டர்களில் அளவுக்கு அதிகமாக ஏற்றி, சாலை விதிகளை மீறி கொண்டு செல்வதால் இரு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.