திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று கோடை விடுமுறை நிறைவு பெறுவதையொட்டி, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். கோவில் ஊழியர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.