உடுமலை கோட்டாட்சியர் அலுவலகம் வீணாகும் அவலம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டாட்சியர் குடியிருப்பு பள்ளபாளையம் அருகே ₹42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. தற்போது அதிகாரிகள் யாரும் வசிக்காததால், குடியிருப்பு புதர்மண்டி காணப்படுகிறது. வளாகத்தைச் சுற்றி சிமை கருவேல மரங்கள் முளைத்துள்ளன. முழுமையாகப் பராமரித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் அல்லது வேறு அரசுப் பணிக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி