உடுமலையில் பயங்கர தீ விபத்து (வீடியோ)

திருப்பூர் உடுமலை பஸ் நிலையம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று இரவு 10 மணியளவில் துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் உடனடியாக தப்பி ஓடியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ கொழுந்து விட்டு எரிந்த நிலையில், உடுமலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். துணிக்கடையில் இருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

தொடர்புடைய செய்தி