திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள புகழ்பெற்ற திருமூர்த்தி மலை அமண லிங்கேஸ்வரர் திருக்கோவிலில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட இடங்களையும் அவர் பார்வையிட்டார். இந்த நிகழ்வில் கோவில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.