திருப்பூர்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு; நாகேந்திரன் குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நாகேந்திரன் பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக கொங்கு மண்டலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். கோவை மற்றும் கரூர் சம்பவங்களை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், திமுக அரசின் மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார். மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சிதான் திமுக என்றும் அவர் விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி