உடுமலையில் தமிழக பாஜக தலைவர் பரபரப்பு பேட்டி

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பாரதிய ஜனதா கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமியின் இல்லத்திற்கு இன்று மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை புரிந்தனர். அப்போது திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளரிடம் நயினார் நாகேந்திரஇன் கூறும்போது, தற்போது உள்ள திமுக அரசு பொதுமக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாமல், மத்திய அரசிடம் இருந்து ஏராளமான திட்டங்களை பெற்றுக்கொண்டு ஸ்டிக்கர் ஒட்டி தாங்கள் செய்ததாக கூறிக்கொண்டு வருவதுடன், மத்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பது, தமிழக முதல்வரின் வாடிக்கையாக உள்ளது. 

மேலும் மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்னால் பல இடங்களில் சாலைகள் பராமரிப்பு செய்யப்படவில்லை குறிப்பாக சாக்கடை கழிவுநீர் கால்வாய்களை துணிகளால் மறைக்கப்பட்டு, முதல்வர் வருவதுதான் திராவிட மாடல் ஆட்சியா. மேலும் திமுக சார்பில் நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவை துரோக கட்சி என்று கூறுவது ஏற்கக்கூடியது அல்ல என்றார். 

பேட்டியின்போது, திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனப்பிரியா சரவணன், திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர்கள் வடுகநாதன் மற்றும் மாவட்ட சார்பு அணி நகர ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி