திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் வழியாக தினமும் பத்துக்கு மேற்பட்ட விரைவு ரயில்கள் சென்னை மதுரை திருச்செந்தூர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. இந்த நிலையில் தினமும் ஏராளமான பயணிகள் உடுமலையிலிருந்து சென்று வருகின்றனர். இந்த நிலையில் குற்ற செயல்களை தடுக்கவும் பயணிகள் பாதுகாப்பு கருதியும் உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உடுமலை ரயில் பயணங்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.