உடுமலை அரசு கலை கல்லூரியில் மாணவர்கள் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பயிலும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்கள் இலவச மடிக்கணினி வழங்கக் கோரி வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி முதல்வர், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, இலவச மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதின் பேரில் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

தொடர்புடைய செய்தி