திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜாக்குவார் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில், 8-வது ஆண்டு பள்ளிகளுக்கு இடையேயான ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டி பெதப்பம்பட்டியில் உள்ள என்.வி. மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் மாணவ, மாணவியர் இதில் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ் மற்றும் வெற்றி கோப்பைகள் வழங்கப்பட்டன.