திருப்பூர் உடுமலை அருகே இலைய முத்தூர் சாலையில் உள்ள அரசு தொலைபயிற்சி நிலையத்தில், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர். வழக்கம்போல் வகுப்புக்கு வந்த மாணவர்களில் சிலரை, நிர்வாகம் மைதானத்தில் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள், வகுப்புக்கு வரும் மாணவர்களை தூய்மைப் பணியில் ஈடுபடுத்திய நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.