உடுமலை: காண்டூர் கால்வாயில் திடீர் நீர்கசிவு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பி ஏ பி தொகுப்பு அணிகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு அணை நிரம்பியதும் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் சர்க்கார் பதியில் இருந்து 44வது கிலோமீட்டர் தூரத்தில் கால்வாயில் திடீர் நீர்கசிவு ஏற்பட்டுள்ளது. இது பற்றிய தகவல் அதிகாரிகளுக்கு தெரிய வந்த நிலையில் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. சீரமைப்பு பணி முடிந்ததும் மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி