திருப்பூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்; முதல்வர் பங்கேற்பு, உடனடி தீர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தேவனூர் புதூர் ஊராட்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை, மருத்துவத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட 43 துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்ற இந்த முகாமில், உடனடி தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் ஆணைகளை வழங்கினார். உடுமலை மேற்கு ஒன்றிய செயலாளர் செழியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி