மாணவ- மாணவிகளுக்கான குழு மற்றும் தடகள போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஸ்ட்ரெங்த் மைலோ (மாணவர்கள் பிரிவு) அணியும், பேலன்ஸிங் வால்டர் (மாணவிகள் பிரிவு) அணியும் பெற்றது. மேலும் மாணவர்கள் பிரிவில் தனி நபர் சாம்பியன்ஷிப் கோப்பையை சுஜய் என்ற மாணவனும், மாணவிகள் பிரிவில் முத்துமணி என்ற மாணவியும் பெற்றனர். இதையடுத்து கல்லூரியின் சார்பாக தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் முனைவர் மனோகர் செந்தூர்பாண்டி மற்றும் மாணவ-மாணவியர்கள் செய்திருந்தனர்.
உசிலம்பட்டியில் மின்னல் தாக்கி 3 பெண்கள் பலி