உடுமலை ஆர். கே. ஆர் கிரிக்ஸ் பள்ளியில் விளையாட்டு விழா

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர்.கே.கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் மாலா மாணவர்கள் அணிவகுப்பு ஏற்றுக்கொண்டு தேசியக் கொடி ஏற்றினார். தேசிய அளவிலும் மாநில அளவிலும் சாதனை புரிந்த மாணவர்கள் சுஜித், மிருதுலா, தாரண்யா, விருந்தா ஆகியோர் ஒலிம்பிக் தீபம் ஏந்திவர, பள்ளி முதல்வர் தீபம் ஏற்றி விழாவைத் துவக்கிவைத்தார். பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் தலைவர் ராமசாமி, கார்த்திக்குமார், பள்ளி முதல்வர் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி