உடுமலை திருமூர்த்தி மலை கோவிலில் சிறப்பு வழிபாடு வழிபாடு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் இன்று வைகாசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அமணலிங்கேஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி