இங்கு பிரதோஷம், கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி, அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. உடுமலை நகரம் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பொதுமக்களும் கோவிலுக்கு வந்து நாள்தோறும் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மஹா சிவராத்திரி யொட்டி மூலவர் நந்தி உள்ளிட்ட கடவுள்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
அப்போது சந்தனம், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், பால், மஞ்சள், இளநீர், பழரசம், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், கரும்புச்சர்க்கரை, சந்தனாதி தைலம் உள்ளிட்ட 27 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிவன் நந்தியை பற்றி பக்தி பாடல்களை பாடி சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.