உடுமலை நகர மன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று (வெள்ளி) நடை பெற்றது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, சட்ட மாமேதை அம்பேத்கர், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி ஆகியோரது முழு உருவ வெண்கல சிலைகள் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் ஒரே இடத்தில் நிறுவப்பட ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடுமலை நகர்மன்ற தலைவர் மு. மத்தீன் அவர்களால் இந்த சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உடுமலை முன்னாள் நகர் மன்ற தலைவர், நகர் மன்ற உறுப்பினர் சி. வேலுச்சாமி இந்த சிலைகளை தனது சொந்த செலவில் நிறுவி பராமரித்துக் கொள்வதாக பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக அகமதாபாத்தில் நேற்று நடந்த கோர விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.