திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பழையூர் கிராமத்தில் குளத்தில் மர்மநபர்கள் மண் திருடுவதாக பொதுமக்கள் தகவல் அறிந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொதுமக்கள், ஒரு ஜேசிபி மற்றும் டிராக்டர்களை சிறைப்பிடித்து வருவாய்த்துறை மற்றும் குடிமங்கலம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வராததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.