உடுமலை ரயில்வே சுரங்க பாதையில் கழிவுநீர் தேக்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக பழனி ஆண்டவர் நகர், ராமசாமி நகர், தாண்டே கவுண்டன் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சேர்ந்த பொதுமக்கள் சென்று வருகின்றனர். சில தினங்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக மழைநீருடன் கழிவுநீர் இரண்டும் கலந்து சுரங்கப்பாதையில் தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி