திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பசுபதி வீதியில் சாலை இருபுறமும் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.