திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளைப்பட்டு கூடு விவசாயம் ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மானுபட்டி பகுதியில் பட்டு வளர்ச்சித் துறை இயக்குனர் சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மல்பெரி அரசு திட்டத்தின் கீழ் மல்பெரி புதுநடவுக்கு 10,500 தனிப்பட்ட புழு வளர்ப்பு முறை அமைப்பதற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகின்றது. விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.