உடுமலை அருகே விதை சான்றளிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டி வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொண்டைக்கடலை விதை பண்ணைகளை திருப்பூர் மாவட்ட உதவி சான்றிப்பு துறை உதவி இயக்குனர் மணிகண்டன் ஆய்வு செய்தார். தரமான சான்று பெற்ற புதிய ரக விதைகளை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், இது குறித்து தெரிந்துகொள்ள பெதப்பம்பட்டி வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையத்தை அணுகலாம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது விதை சான்றிப்பு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி