உடுமலையில் அறிவியல் கண்காட்சி - மாணவர்கள் அசத்தல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், ரோட்டரி சங்கம் சார்பில் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் அறிவியல் திருவிழா நடைபெற்றது. இதில் மாணவர்கள் பல்வேறு அறிவியல் படைப்புகளை செய்து அசத்தினர். பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர்கள் அறிவியல் துறையில் சாதிக்க தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என சிறப்பு விருந்தினர்கள் அறிவுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி