திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் 20க்கும் மேற்பட்ட அரசு ஆண்கள் பள்ளி, அரசு பெண்கள் பள்ளி, நடுநிலைப்பள்ளி, துவக்கப்பள்ளி என பல பள்ளிகள் உள்ளன. கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.