உடுமலையில் அகல் விளக்குகள் விற்பனை தீவிரம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாளை கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், ஒருமுக, இருமுக, 5 முக, கோபுர மற்றும் டிசைன் விளக்குகளின் விற்பனை ராஜேந்திர ரோடு உள்ளிட்ட பல இடங்களில் தீவிரமடைந்துள்ளது. ஒரு விளக்கு ரூ. 1.50 முதல் ரூ. 350 வரை விற்பனையாகிறது. விலை உயர்ந்தாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். சீசன் சமயத்தில் தற்காலிக கடைகளால் பாதிக்கப்பட்ட நிரந்தர வியாபாரிகள், நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி