உடுமலை ரயில்வே மேம்பாலத்தில் சாலை சேதம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை தயிர் ரோடு மேம்பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிவதால், தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். திருமூர்த்தி அணை மற்றும் மூணார் செல்லும் வாகனங்கள் இந்த மேம்பாலத்தை பயன்படுத்துகின்றன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக சாலையை பராமரிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி