உடுமலை அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எலையமுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பார்த்தசாரதி புரத்தில் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில வாரங்களாகவே முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது. இந்த நிலையில் இன்று (ஜூன் 11) குமரலிங்கம் குறிச்சிக்கோட்டை சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் முறையாக குடிநீர் வழங்கப்படும் என கூறியதால் மக்கள் கலைந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி