உடுமலை: ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்படும் அபாயம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைதளி ரோட்டில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் வழியாக மூணாறு, அமராவதி அணை, திருமூர்த்தி அணை உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். மேம்பாலத்தில் சில இடங்களில் தற்போது சாலையில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்துக்கள் ஏற்படும் முன்பு சாலையை பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி