உடுமலை அருகே சாலையின் குறுக்கே மரக்கிளையால் விபத்து அபாயம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் திருமூர்த்தி அணைக்கு செல்லும் பிரதான சாலையில், மரக்கிளை ஒன்று குறுக்கே தொங்கிக்கொண்டுள்ளது. இதனால், இந்த சாலை வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, உடனடியாக மரக்கிளையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி