திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா அணிக்கடவு ஊராட்சியில் உள்ள ராமசந்திரபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வரும் 14ஆம் தேதி ரேஷன் குறை தீர்ப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் பொதுமக்கள் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போனில் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு நகல் கோரிக்கைகள் நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.