திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் சாரல் மற்றும் கனமழையால் கணக்கம்பாளையம் ஊராட்சி ஜீவா நகர் 2-வது தெருவில் சாலை குண்டும் குழியுமாகி, மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.