இதுகுறித்து சமூக அலுவலர்கள் கூறுகையில், தனியார் பஸ்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படியே இயக்கியும் வருகின்றனர். ஆனால் நேற்று தகராறில் ஈடுபட்ட இரண்டு தனியார் பஸ்களும் நீண்ட நாட்களாக நேர ஒதுக்கீட்டை கடைபிடிக்காமல் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களால் பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசலும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியும் வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உடுமலை போலீசார் பஸ் நிலையத்திற்கு வந்து இரண்டு பஸ்களையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதன் பின்பு போக்குவரத்து சீரானது. இதுகுறித்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய முறையில் விசாரணை செய்து தகராறில் ஈடுபட்ட தனியார் பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.