உடுமலை அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவன் அன்பு, பொதுத் தேர்வில் கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று, மொத்தம் 500க்கு 494 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்த மாணவனை உடுமலை இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் அப்பாஸ் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி