திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்த விவேகானந்தா வித்யாலயம் பள்ளி தாளாளர் மூர்த்தி அவர்களின் மகள் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று மைசூரில் உள்ள விவேகானந்தா வித்யாலயம் பள்ளியில் பள்ளிக்கு உடல் கொண்டுவரப்பட்ட நிலையில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் சாமி மாலை அணிவித்து நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.