உடுமலை அருகே அரசு பள்ளியில் உறுதிமொழி எடுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜான் பாஷா எய்ட்ஸ் விழிப்புணர்வு தின உறுதிமொழி வாசிக்க, மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முதுகலை ஆங்கில ஆசிரியர் சுபத்ரா நன்றி கூறினார். கவிதை மற்றும் ஸ்லோகன் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி