உடுமலை அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி வனப்பகுதி வழியாக மூணாறு, காந்தளூர் போன்ற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு வனத்துறையினர் பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வனப்பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வீசக்கூடாது என அறிவுறுத்தி, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த துண்டுப் பிரசுரங்கள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி