உடுமலை அருகே திருமூர்த்தி அணை சாலையில் மண் குவியல்

திருப்பூர் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், அணையின் நுழைவாயில் பகுதியில் மண் குவிந்து கிடப்பதால் இரவு பகல் என பாராமல் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக மண் குவியலை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த மண் குவிப்பு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி