திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் கட்டிட அனுமதி தொடர்ச்சியான கட்டிடப் பகுதி (CBA) அரசாணை வெளியீடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா சார்பில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அவர்களிடம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட எம்எல்ஏ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த நிகழ்வில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.