திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அமணலிங்கேஸ்வரர் கோயில் நிர்வாகம் இன்று (மே 20) அனுமதி வழங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக வெள்ளப்பெருக்கு காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து பாதுகாப்பான அளவில் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.