திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரையிலான நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பெரியகோட்டை ஊராட்சிக்கு செல்லும் இணைப்பு சாலை கரடு முரடாக இருப்பதால் இரவு பகல் நேரங்களில் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, சாலைக்கு உடனடியாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.