உடுமலை அருகே குப்பைகளுக்கு தீ வைப்பு; மக்கள் அவதி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் உடுமலை கால்வாய் அருகில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் இங்கு தினமும் பள்ளபாளையம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து தீ வைக்கப்படுவதால், அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டுநர்களும் புகை மூட்டத்தால் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி