திருப்பூர் மாவட்டம் உடுமலை ராகல்பாவி ஊராட்சி ரயில்வே சுரங்கப்பாதையிலிருந்து முக்கோணம் ஆர் கிருஷ்ணாபுரம் வரை அமைக்கப்பட்ட இணைப்பு சாலை தற்போது கரடு முரடாக இருப்பதால், ஊராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சாலையை அவசர தேவைக்கும் விவசாயிகள் விளைபொருட்கள் கொண்டு செல்லவும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.