உடுமலை அருகே நெற் பயிர் சேதம்- இழப்பீடு வழங்க வலியுறுத்தல்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை பாசனப் பகுதிகளில் கல்லாபுரம் பகுதியில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு நடவு, பராமரிப்பு, அறுவடை என சுமார் முப்பதாயிரம் வரை செலவாகிறது. அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறையால் காலதாமதம் ஏற்பட்ட நிலையில், வடகிழக்கு பருவமழையால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்துள்ளன. இதனால் பெரும் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், அதிகாரிகள் நெல்மணிகளை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி