திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிடர் முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் (ஓபிஸ் அணி) சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் 100 உள் நோயாளிகளுக்கு பழங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வுக்கு திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் மடத்துக்குளம் கே மாரிமுத்து தலைமை தாங்கினார். உடுமலை நகர செயலாளர் நடராஜ் ஏற்பாடுகளைச் செய்தார்.